பத்தாம் திருமுறை
1237 பதிகங்கள், 3000 பாடல்கள்
மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14


பாடல் எண் : 13

கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிற்கோலம் அஞ்செழுத் தாமே  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

ஆடரங்கு ஒன்றை அமைத்து, அதனுள் ஆடப் புகுந்த மங்கையர் இருவர் தாங்கள் ஆடும்பொழுது பன்னிரண்டங்குல தூரம் முன்னோக்கிச் செல்கின்றனர்; ஆயினும், பின்னோக்கி வரும் பொழுது எட்டங்குல தூரமே வருகின்றனர். ஆகவே, அவர் ஒவ்வொரு முறையிலும் நாலங்குல தூரம் கூடத்தை விட்டு நீங்கு பவராகின்றனர். (இவ்வாறே அவர்களது ஆட்டம் நடைபெறு மாயின் எப்பொழுதாவது அவர்கள் அவ்வாடரங்கை முழுதும் விட்டு அப்பாற் போதலும், மீள அதன்கண் வாராமையும் உளவாதல் தப்பா தன்றோ!) ஆகையால், ஒவ்வொரு முறையும் அந்த நாலங்குல தூரமும் அவர்கள் மீண்டு வருவராயின், அக் கூடத்தின் அழகு என்றும் அழியா அழகாய் நிலைத்திருக்கும்.

குறிப்புரை:

\\"ஓடுவர் பன்னிரண்டங்குலம்; மீளுவர் எண்விரல்\\" என நிரல்நிரையாக்கிப் பின், \\"நீடு உவர் இவ்வாற்றால் நால் விரல் கண்டிப்பர்; (அதனையும் அவர்) கூடிக்கொளின், கோலம் அஞ் செழுத்தாம்\\" எனக் கூட்டி உரைக்க. நீடு உவர் - ஆட்டத்தில் நீடு நிற்கின்ற இவர். கண்டிப்பர் - துணிப்பர். மந்திரங்களே அழிவில்லன; அவற்றுள்ளும் அஞ்செழுத்து மந்திரம் அழிவிலதாதலின், அழியாமை குறித்தற்கு, அஞ்செழுத்தாக்கி அருளிச்செய்தார். அஞ்செழுத்து, திருவைந்தெழுத்தும், வியட்டிப் பிரணவமுமாம். இனி, ஓவியத்தின் மறுபெயராகிய `எழுத்து\\' என்பதும், \\"கோலம்\\" என்பதுபோலவே ஆகுபெயராய் அழகினைக் குறித்தது எனக் கொண்டு, ஏகாரத்தை எதிர்மறை வினாவாக்கி, `அழியுமோ என்று அஞ்சப்படும் அழகாகுமோ! ஆகாது\\' என உரைத்தலுமாம். இனி, இதற்கு \\"அஞ்செழுத்துருவமாதற்கு ஏற்றதாகும்\\" என உரைத்தலுமாம். ஆடல் மங்கையர் அப்பாற்போய், மீளவும் அதனுள் வாராதொழியின், ஆடரங்கு அழிந்தொழியும் என்பதாம்.
கூடம், உடம்பு, ஆடல் மங்கையர், இரு மூக்கு வழியாக இயங்குகின்ற பிராண வாயு, \\"மக்களது மூச்சுக் காற்று இயல்பாக வெளிச் செல்லும் பொழுது பன்னிரண்டங்குல அளவு செல்லும்\\" என்பதும், \\"மீண்டு அஃது உட்புகும்பொழுது, முன் சென்ற அளவு புகாது, இயல்பாக எட்டங்குல அளவே புகும்\\" என்பதும் யோகநூல் வரையறை. எனவே, \\"வெளிச் சென்ற காற்றில் மூன்றில் இரண்டு பங்கே உட்புக, ஒருபங்கு இழப்பாகின்றது\\" என்பதும், `அவ் இழப்பினாலே நாள்தோறும் வாழ்நாள் அளவு குறைந்துகொண்டே வருகின்றது\\' என்பதும், `அவ்வாறாகாது தடுப்பது பிராணாயாமம் என்பதும்\\' கருத்தாதல் அறிந்துகொள்ளப்படும்.
இதனால், பிரணாயாமத்தால் வாழ்நாள் நீட்டிக்குமாறு தெரித்துணர்த்தப்பட்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
శరీరంలో నివసించడానికి స్థలం గ్రహించిన స్త్రీలు ఇద్దరున్నారు. వాళ్లు ఇడ, పింగళ నాడులు. శరీరంలో చలించే ప్రాణవాయువు పన్నెండు అంగుళాలు సాగి వెలువడుతుంది. వయస్సు మీరినప్పుడు కంఠానికి పైన, శిరస్సులో వెళ్లే గాలి నాలుగు అంగుళాలు తగ్గి ఎనిమిది అంగుళాలు మాత్రమే సాగుతుంది. ఆ నాలుగు అంగుళాలు స్వాధీనమైతే జీవుడు శివ స్వరూపం (సారూప్యం) పొందుతాడు.

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
इस शरीर रूपी भवन में प्राण वायुरूपी महिलाएँ
अंदर और बाहर लगातार दौड़ती रहती हैं,
यदि बारह मात्रा पूरक किया जाए और आठ मात्रा रेचक
और चार मात्रा कुंभक
तो आप दैवी सदाशिव बन जाएँगे।

- रूपान्तरकार - शिशिर कुमार सिंह 1996
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The Prana breath
The pair of damsels within body-house
Runs in and out constant;
If twelve matras inhaled
Eight matras exhaled,
The four matras retained
Shall make you divine in Siva.
Translation: B. Natarajan (2000)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀽𑀝𑀫𑁆 𑀏𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀓𑀼𑀝𑀺𑀧𑀼𑀓𑁆𑀓 𑀫𑀗𑁆𑀓𑁃𑀬𑀭𑁆
𑀑𑀝𑀼𑀯𑀭𑁆 𑀫𑀻𑀴𑀼𑀯𑀭𑁆 𑀧𑀷𑁆𑀷𑀺𑀭𑀡𑁆 𑀝𑀗𑁆𑀓𑀼𑀮𑀫𑁆
𑀦𑀻𑀝𑀼𑀯𑀭𑁆 𑀏𑁆𑀡𑁆𑀯𑀺𑀭𑀮𑁆 𑀓𑀡𑁆𑀝𑀺𑀧𑁆𑀧𑀭𑁆 𑀦𑀸𑀮𑁆𑀯𑀺𑀭𑀮𑁆
𑀓𑀽𑀝𑀺𑀓𑁆 𑀓𑁄𑁆𑀴𑀺𑀶𑁆𑀓𑁄𑀮𑀫𑁆 𑀅𑀜𑁆𑀘𑁂𑁆𑀵𑀼𑀢𑁆 𑀢𑀸𑀫𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কূডম্ এডুত্তুক্ কুডিবুক্ক মঙ্গৈযর্
ওডুৱর্ মীৰুৱর্ পন়্‌ন়িরণ্ টঙ্গুলম্
নীডুৱর্ এণ্ৱিরল্ কণ্ডিপ্পর্ নাল্ৱিরল্
কূডিক্ কোৰির়্‌কোলম্ অঞ্জেৰ়ুত্ তামে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிற்கோலம் அஞ்செழுத் தாமே 


Open the Thamizhi Section in a New Tab
கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிற்கோலம் அஞ்செழுத் தாமே 

Open the Reformed Script Section in a New Tab
कूडम् ऎडुत्तुक् कुडिबुक्क मङ्गैयर्
ओडुवर् मीळुवर् पऩ्ऩिरण् टङ्गुलम्
नीडुवर् ऎण्विरल् कण्डिप्पर् नाल्विरल्
कूडिक् कॊळिऱ्कोलम् अञ्जॆऴुत् तामे 
Open the Devanagari Section in a New Tab
ಕೂಡಂ ಎಡುತ್ತುಕ್ ಕುಡಿಬುಕ್ಕ ಮಂಗೈಯರ್
ಓಡುವರ್ ಮೀಳುವರ್ ಪನ್ನಿರಣ್ ಟಂಗುಲಂ
ನೀಡುವರ್ ಎಣ್ವಿರಲ್ ಕಂಡಿಪ್ಪರ್ ನಾಲ್ವಿರಲ್
ಕೂಡಿಕ್ ಕೊಳಿಱ್ಕೋಲಂ ಅಂಜೆೞುತ್ ತಾಮೇ 
Open the Kannada Section in a New Tab
కూడం ఎడుత్తుక్ కుడిబుక్క మంగైయర్
ఓడువర్ మీళువర్ పన్నిరణ్ టంగులం
నీడువర్ ఎణ్విరల్ కండిప్పర్ నాల్విరల్
కూడిక్ కొళిఱ్కోలం అంజెళుత్ తామే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කූඩම් එඩුත්තුක් කුඩිබුක්ක මංගෛයර්
ඕඩුවර් මීළුවර් පන්නිරණ් ටංගුලම්
නීඩුවර් එණ්විරල් කණ්ඩිප්පර් නාල්විරල්
කූඩික් කොළිර්කෝලම් අඥ්ජෙළුත් තාමේ 


Open the Sinhala Section in a New Tab
കൂടം എടുത്തുക് കുടിപുക്ക മങ്കൈയര്‍
ഓടുവര്‍ മീളുവര്‍ പന്‍നിരണ്‍ ടങ്കുലം
നീടുവര്‍ എണ്വിരല്‍ കണ്ടിപ്പര്‍ നാല്വിരല്‍
കൂടിക് കൊളിറ്കോലം അഞ്ചെഴുത് താമേ 
Open the Malayalam Section in a New Tab
กูดะม เอะดุถถุก กุดิปุกกะ มะงกายยะร
โอดุวะร มีลุวะร ปะณณิระณ ดะงกุละม
นีดุวะร เอะณวิระล กะณดิปปะร นาลวิระล
กูดิก โกะลิรโกละม อญเจะฬุถ ถาเม 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကူတမ္ ေအ့တုထ္ထုက္ ကုတိပုက္က မင္ကဲယရ္
ေအာတုဝရ္ မီလုဝရ္ ပန္နိရန္ တင္ကုလမ္
နီတုဝရ္ ေအ့န္ဝိရလ္ ကန္တိပ္ပရ္ နာလ္ဝိရလ္
ကူတိက္ ေကာ့လိရ္ေကာလမ္ အည္ေစ့လုထ္ ထာေမ 


Open the Burmese Section in a New Tab
クータミ・ エトゥタ・トゥク・ クティプク・カ マニ・カイヤリ・
オートゥヴァリ・ ミールヴァリ・ パニ・ニラニ・ タニ・クラミ・
ニートゥヴァリ・ エニ・ヴィラリ・ カニ・ティピ・パリ・ ナーリ・ヴィラリ・
クーティク・ コリリ・コーラミ・ アニ・セルタ・ ターメー 
Open the Japanese Section in a New Tab
gudaM eduddug gudibugga manggaiyar
odufar milufar banniran danggulaM
nidufar enfiral gandibbar nalfiral
gudig golirgolaM andelud dame 
Open the Pinyin Section in a New Tab
كُودَن يَدُتُّكْ كُدِبُكَّ مَنغْغَيْیَرْ
اُوۤدُوَرْ مِيضُوَرْ بَنِّْرَنْ تَنغْغُلَن
نِيدُوَرْ يَنْوِرَلْ كَنْدِبَّرْ نالْوِرَلْ
كُودِكْ كُوضِرْكُوۤلَن اَنعْجيَظُتْ تاميَۤ 


Open the Arabic Section in a New Tab
ku˞:ɽʌm ʲɛ̝˞ɽɨt̪t̪ɨk kʊ˞ɽɪβʉ̩kkə mʌŋgʌjɪ̯ʌr
ʷo˞:ɽɨʋʌr mi˞:ɭʼɨʋʌr pʌn̺n̺ɪɾʌ˞ɳ ʈʌŋgɨlʌm
n̺i˞:ɽɨʋʌr ʲɛ̝˞ɳʋɪɾʌl kʌ˞ɳɖɪppʌr n̺ɑ:lʋɪɾʌl
ku˞:ɽɪk ko̞˞ɭʼɪrko:lʌm ˀʌɲʤɛ̝˞ɻɨt̪ t̪ɑ:me 
Open the IPA Section in a New Tab
kūṭam eṭuttuk kuṭipukka maṅkaiyar
ōṭuvar mīḷuvar paṉṉiraṇ ṭaṅkulam
nīṭuvar eṇviral kaṇṭippar nālviral
kūṭik koḷiṟkōlam añceḻut tāmē 
Open the Diacritic Section in a New Tab
кутaм этюттюк кютыпюкка мaнгкaыяр
оотювaр милювaр пaннырaн тaнгкюлaм
нитювaр энвырaл кантыппaр наалвырaл
кутык колыткоолaм агнсэлзют таамэa 
Open the Russian Section in a New Tab
kuhdam eduththuk kudipukka mangkäja'r
ohduwa'r mih'luwa'r panni'ra'n dangkulam
:nihduwa'r e'nwi'ral ka'ndippa'r :nahlwi'ral
kuhdik ko'lirkohlam angzeshuth thahmeh 
Open the German Section in a New Tab
ködam èdòththòk kòdipòkka mangkâiyar
oodòvar miilhòvar panniranh dangkòlam
niidòvar ènhviral kanhdippar naalviral
ködik kolhirhkoolam agnçèlzòth thaamèè 
cuutam etuiththuic cutipuicca mangkaiyar
ootuvar miilhuvar pannirainh tangculam
niituvar einhviral cainhtippar naalviral
cuutiic colhirhcoolam aigncelzuith thaamee 
koodam eduththuk kudipukka mangkaiyar
oaduvar mee'luvar pannira'n dangkulam
:needuvar e'nviral ka'ndippar :naalviral
koodik ko'li'rkoalam anjsezhuth thaamae 
Open the English Section in a New Tab
কূতম্ এটুত্তুক্ কুটিপুক্ক মঙকৈয়ৰ্
ওটুৱৰ্ মীলুৱৰ্ পন্নিৰণ্ তঙকুলম্
ণীটুৱৰ্ এণ্ৱিৰল্ কণ্টিপ্পৰ্ ণাল্ৱিৰল্
কূটিক্ কোলিৰ্কোলম্ অঞ্চেলুত্ তামে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.